

ஏப்ரல் 12, 2023 அன்று, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில் முனைவோர் திட்டமான பிளாஸ்டிக்சைக்கிள், இலங்கையில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் இளைஞர்கள் தலைமையிலான கடல் பாதுகாப்பு அமைப்பான த பேர்ல் புரொடெக்கடர்ஸ் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இலங்கையைச் சுற்றி அமைந்துள்ள உணர்திறன் வாய்ந்த கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பாறைகளில் இருந்து நீருக்கடியில் உள்ள கடல் குப்பைகளை அகற்றும் திட்டம். “இலங்கைக்கான தூய்மையான கடற்படுகைகள்” என்ற தலைப்பிலான இந்த பயணத்திற்கான இந்த கூட்டாண்மையானது, இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு வினையூக்கியாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்ட பிளாஸ்டிக்சைக்கிளின் பயணத்தின் மற்றுமொரு படியாக விளங்குகிறது.
தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை (NARA) நடத்திய ஆய்வின்படி, இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள 80% கடற்படுகை மாசுபட்டதாகக் கருதப்படுகிறது. இந்த மாசுபாட்டிற்குக் காரணம், இலங்கையின் 25% க்கும் அதிகமான மக்கள் தீவின் கடற்கரைக்கு அருகாமையில் வசிப்பதுடன் வீடுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கடலுக்குள் செலுத்தப்படுவதன் விளைவுமாகும். இந்த கழிவுகளிலிருந்து, 15% மட்டுமே நீரின் மேற்பரப்பில் மிதக்கிறது, மீதமுள்ளவை கடல் தரையில் மூழ்கிவிடுகின்றன. உலகளவில், நைலான் வலைகள் போன்ற தொலைந்து போன அல்லது கைவிடப்பட்ட மீன்பிடி சாதனங்கள் போன்ற சுமார் ஒரு மில்லியன் தொன் ‘கோஸ்ட் கியர்’ இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உலகெங்கிலும் உள்ள 550 வகையான கடல் உயிரினங்களுக்கு காயம் மற்றும் இறப்பு ஏற்படுகிறது. இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களை கருத்தில் கொண்டு, த பேர்ல் புரொடெக்ட்டர்ஸ் இலங்கை பயணத்திற்காக தூய்மையான கடற்படுகைகளை அறிமுகப்படுத்தியது.
த பேர்ல் புரொடெக்ட்டர்ஸ் இன் ஒருங்கிணைப்பாளர் முதித கட்டுவாவல கூறுகையில், “பிளாஸ்டிக்சைக்கிள் மூலம் வழங்கப்படும் ஆதரவு, பிளாஸ்டிக் மாசு மற்றும் கடல் குப்பைகளால் கடல் மற்றும் கடல் சூழல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கட்டத்தில் வருகிறது. இந்த கூட்டாண்மை மூலம், இலங்கையைச் சுற்றியுள்ள உணர்திறன் வாய்ந்த கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க முடியும் நாங்கள் என்று நம்புகிறோம்.”
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பிளாஸ்டிக்சைக்கிள் திட்டத்தின் பங்களிப்பு, எதிர்வரும் ஆண்டில், மோசமான கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் கடல் நீரோட்டங்கள் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ள இலங்கையின் கடலோரப் பகுதியில் மேற்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் நீருக்கடியில் சுத்திகரிப்புக்கு உதவும். இந்த பயணம் உலகெங்கிலும் உள்ள தன்னார்வ நீர்மூழ்கிக் குழுவினர் பங்கேற்கவும், கடலுக்கடியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும் வாய்ப்பளிக்கிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் மைக்ரோபிளாஸ்டிக்களாக உடைந்து கடல் ஆமைகள், பிளாங்க்டன் மற்றும் பல்வேறு வகையான மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்கிறது.
“இலங்கையின் சமுத்திரத்தில் பிளாஸ்டிக் மாசுபாட்டைச் சமாளிக்க த பேர்ல் புரொடெக்ட்டர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திட்டத்தின் மூலம், நில முயற்சிகளுக்கு அப்பால் எங்கள் கவனத்தை நகர்த்தவும், தூய்மையான கடல்களை நோக்கி செயல்படவும் ஆர்வத்துடன் இருக்கின்றோம். எங்களால் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் கணிசமான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். “, என ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பெருநிறுவன நிதி, குழு வரி மற்றும் சமூக தொழில்முனைவுத் தலைவர் நிஸ்ரீன் ரெஹ்மான்ஜி கூறினார்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையூம் கொண்ட ஜே.கே.எச், ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்பதை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.
படத்தில் உள்ளவர்கள்: இடமிருந்து வலமாக – ஹரித வல்கம்பய (பிராண்டிங் மற்றும் தகவல் தொடர்பாடல் நிர்வாகி – பிளாஸ்டிக்சைக்கிள்), பசன் சேனாதீர (உதவி மேலாளர் செயல்பாடுகள் – பிளாஸ்டிக்சைக்கிள்), நிஸ்ரீன் ரெஹ்மான்ஜி (பெருநிறுவன நிதி, குழு வரி மற்றும் சமூக தொழில்முனைவுத் தலைவர்) மற்றும் சுரேஷ் ராஜேந்திரா (தலைவர் ஓய்வு துறை – ஜோன் கீல்ஸ் குழுமம்), முதித கட்டுவாவல (ஒருங்கிணைப்பாளர் – தி பேர்ல் புரொடெக்டர்ஸ்), மலீஷா குணவர்தன, எமிலி பெர்லாக, ரோஸ் பெர்னாண்டோ, அமில சுமனபால.