

மஹரகம பிரதேச செயலகத்தின் அழைப்பின் பேரில் வித்யாகார பாலிகா வித்தியாலய மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2022 ஆகஸ்ட் 24 அன்று பிளாஸ்டிசைக்கிள் நடத்தியது. பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு தொட்டிகள் மற்றும் மறுசுழற்சிக்கான ஈகோ ஸ்பின்ட்ல்ஸ் (பிரைவட்) லிமிடெட், முன்னணி அனுசரணையாளரான எலிபன்ட் ஹவுஸ் பானங்களுடன் இணைந்ததன் மூலம் பிளாஸ்டிசைக்கிள் இந்த அமர்வை வலுப்படுத்தியது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம், பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கம் குறித்து இளைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுப்பதுடன், மறுத்தல், குறைத்தல், மீளப் பயன்படுத்தல் மற்றும் மீள்சுழற்சி ஆகிய விடயங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் நமது பூமியைப் பாதுகாப்பதில் அவர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை பயிற்சி செய்வதுமாகும்.
இந்த நிகழ்ச்சியானது 6, 7 மற்றும் 8, 9 ஆம் வகுப்புகளுக்கு, 2 அமர்வுகளில் இயல்பான மற்றும் செயல் விளைவு நிகழ்வுடன் பிளாஸ்டிசைக்கிள், எலிஃபண்ட் ஹவுஸ் மற்றும் ஈகோ ஸ்பிண்டில்ஸினால் வினாடி வினாக்கள் மற்றும் போட்டிகள் ஆகியவற்றுடன் நடத்தப்பட்டது. பொறுப்பான அகற்றலை ஊக்குவிக்கும் வகையில், பாடசாலை வளாகத்தில் உள்ள பெட் போத்தல்கள், எச்டிபிஎ பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் மூடிகள் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிலிருந்து பெறப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வகையில், இரண்டு பிளாஸ்டிசைக்கிள் தொட்டிகள் பாடசாலையில் வைக்கப்பட்டன.