

பிப்ரவரி 22 அன்று, 12 ஐஎஃஎஸ் இன் தன்னார்வலர்கள் வெரலுகஹமுலவில் உள்ள மாசுபட்ட பகுதியை சுத்தம் செய்வதில் தங்கள் கூட்டாண்மை சமூக பொறுப்பு தினத்தை செலவிட்டனர். ஐஎஃஎஸ் ஃபவுன்டேஷன் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில் முனைவோர் திட்டமான பிளாஸ்டிக்சைக்கிள் உடன் இணைந்து, பிளாஸ்டிக் மாசுபாடு, மனித ஆரோக்கியம், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு அமர்வை நடத்தியதுடன், கழிவுகளை பிரித்தெடுப்பது குறித்த தன்னார்வ விளக்கத்தையும் மாதம்பை பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்ற சுத்தம் செய்யும் பணியின் போது வழங்கியது. இந்த தூய்மைப்படுத்தல் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த 16 தன்னார்வலர்களைக் கொண்டது, இதன் விளைவாக மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கலன்கள் உட்பட பல பைகளில் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. அதன்பிறகு, சேகரிப்புகள் உள்ளூர் அதிகாரிகளிடம் பொறுப்புடன் அகற்றுவதற்காக ஒப்படைக்கப்பட்டன