

21 ஆகஸ்ட் 2023 அன்று, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில் முனைவோர் திட்டமான பிளாஸ்டிக்சைக்கிள், இந்த ஆண்டிற்கான அவர்களின் முக்கிய திட்டங்களில் ஒன்றான ‘ஸ்டார்ட்-அப்-சைக்கிள்’, ஜோன் கீல்ஸ் ஓ உடன் இணைந்து தொடங்கப்பட்ட சவால் தளமான, குழுமத்தின் தீவிரப்படுத்தப்பட்ட செயல்பாடுகள், மற்றும் ஜோன் கீல்ஸ் ரிசெர்ச் – குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை மற்றும் புத்தாக்கப் பிரிவானது, இலங்கையின் புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பிளாஸ்டிக் பாவனை மற்றும் கழிவுகளை குறைப்பதில் உள்ள சவால்கள் தொடர்பாக இலங்கையின்; வணிகங்கள் வழங்கும் பிரச்சனை பற்றிய அறிக்கைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுமையான நடைமுறைப்படுத்தக்கூடிய நீண்ட கால தீர்வுகளைத் தேடும் முயற்சியான, ஸ்டார்ட்-அப்-சைக்கிள், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை வளர்ப்பதையும் ஆதரவளிப்பதையும் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளின் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முயற்சிக்கும் அதே வேளையில், அடுத்த தலைமுறை மாற்றங்களை உருவாக்குபவர்களை வளர்ப்பது மற்றும் வலுவூட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்தத் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான பதில்களைக் கண்டறிவதே எங்கள் முதன்மை நோக்கமாக உள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களது அறிக்கைகளை சமர்ப்பித்தவுடன் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் கடுமையான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவார்கள். குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் பிரத்தியேகமாக பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள், அங்கு அவர்கள் பிரச்சனை அறிக்கைகளை வழங்கும் அந்தந்த வணிகங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த ஊடாடும் அமர்வின் போது, விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு சவாலின் குறிப்பிட்ட விவரங்களையும் ஆராய்ந்து தெளிவு பெறலாம். மேலும் 6 வார நிகழ்ச்சித் திட்டம் நடத்தப்படும், இதில் சட்ட, நிதி, வணிக செயல்முறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் தீர்வு வழங்குநர்களுக்கு அவர்களின் குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பை (MVP) உருவாக்குவதற்கான பயணத்தில் வழிகாட்டி ஆதரவளிப்பார்கள். இந்த தளம் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டை அணுகும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய புதுமையான தீர்வுகளுக்கு வழி வகுக்கும்.
மேலும் தகவலுக்கு பார்வையிடவும்; www.Plasticcycle.lk/startupcycle.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே.கே.எச், ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்பதை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.