

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில்முனைவோர் திட்டமான பிளாஸ்டிக்சைக்கிள், உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘பின்-நோவேட் 2022’ ஐ அறிமுகப்படுத்தியது. மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வைக்கப்படும் தொட்டிக்கான வடிவமைப்பு யோசனைகளை சமர்ப்பிப்பதற்காக பொதுமக்களை ஊக்குவிப்பதே இந்தப் போட்டியின் கருத்துப்படிவமாகும்.
சிறு வயதிலிருந்தே படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் 8-13 வயது பிரிவு உட்பட 3 வயது பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அதேசமயம் பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை நினைவூட்டுவதாகவும் இந் நிகழ்வு செயல்படுகிறது. தொட்டியின் வடிவமைப்புக்கான வரன்முறைகள் கடற்கரை நிலைமைகளைத் தாங்கக்கூடிய ஒரு நிலையான பொருளில் இருந்து தயாரிக்கப்படுவதை உள்ளடக்கியது மற்றும் மேல்சுழற்சி செய்யப்பட்ட அல்லது மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கிய எந்தவொரு வடிவமைப்பிற்கும் கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட்டன. பணப் பரிசுகள் தவிர, தொட்டிகளை உற்பத்தி செய்ய வடிவமைப்புகளை பிளாஸ்டிக்சைக்கிள் பயன்படுத்தும் பட்ச்த்தில் வெற்றி பெற்றவர்கள் உரிய பாராட்டுதலைப் பெறுவார்கள்.
பின்-நோவேட் குறித்து பேசிய நிஸ்ரீன் ரெஹ்மான்ஜி – நிர்வாக துணைத் தலைவர் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் பெருநிறுவன நிதி, மற்றும் சமூக தொழில் முனைவோர் திட்டத்தின் தலைவர், ‘பிளாஸ்டிக்சைக்கிளில் நாங்கள் தொடர்ந்து மக்களுடன் இணைந்து நமது பிளாஸ்டிக் தடத்தை உணர்வுபூர்வமாகக் குறைப்பதற்கான மனநிலை மாற்றத்தை உருவாக்க பொதுமக்களுடன் ஈடுபடுவதற்கான வழிகளைப் பார்க்கிறோம். இதுபோன்ற போட்டிகள் மூலம் நாம் செய்வதை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை உருவாக்குவது, பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றுவதை ஊக்குவிப்பதற்காக நமது சமூகத்துடன் ஈடுபடுவது மட்டுமல்லாமல், திறமை மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த உதவுகிறது. பொறுப்பான அகற்றலை ஆதரிப்பது நாங்கள் கவனம் செலுத்தும் தூண்களில் ஒன்றாகும். 250 க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளைக் கொண்ட எங்களின் தற்போதைய பிளாஸ்டிக் கழிவு சேகரிப்புத் தொட்டி வலையமைப்பை கடற்கரையோரம் உள்ள நிலைமைகளைத் தாங்கக்கூடிய தொட்டிகளுடன் விரிவுபடுத்தும் நோக்கில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.”
கருத்து வல்லுநர் லீ பசல்ஜெட், பட்டய கட்டிடக் கலைஞர் ருசிரா விக்கிரமசிங்க மற்றும் நிஸ்ரீன் ரெஹ்மான்ஜி ஆகியோரால் வடிவமைப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டன. வெற்றி பெற்ற, அத்திலிகொட கமகே புமிது கல்ஹான் (8-13 வயது | பிரிவு), சவீன் உவிஷ்க சேரசிங்க (14-19 வயது | பிரிவு) மற்றும் நபிலா நுஷின் இம்தியாஸ் (20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவு) அவர்களுக்கு ஜூலை 31, 2022 அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
பிளாஸ்டிக்சைக்கிள் கொழும்பு பங்குபரிமாற்றத்தில் இலங்கையின் பெரியளவிலான நிறுவனமாக பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி இன் சமூக தொழில் முனைவோர் திட்டமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது. எல்.எம்.டி இதழால் 17 வருடங்களாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று பெயர் பெற்றுள்ளதுடன் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே.கே.எச் ஆனது ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் மூலமாகவும், சமூக தொழில்முனைவோர் முயற்சியான ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ மூலமாகவும் ‘நாளைக்கான தேசத்தை மேம்படுத்துதல்’ என்ற அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பு தரிசனத்தை இயக்குகிறது.