

2022 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி ஹிக்கடுவ கடற்கரையோரத்தில் ஹிக்கடுவ ஹோட்டலில் இருந்து
4
கிமீ தொலைவில் உள்ள சஃபைர் சீஸ் ஹோட்டல் வரையில், ஹிக்கா டிரான்ஸ் பை சினமன் நிறுவனத்துடன்
இணைந்து, பிளாஸ்டிக்சைக்கிள் குறிப்பிட்ட இடத்தில் அமைந்துள்ள கடற்கரையை சுத்தப்படுத்தியது. 80
படை மற்றும் காவல்துறை சார்ந்தவர்கள், 110 ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் 60 க்கும் மேற்பட்ட
பங்குதாரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் (தேசிய தூய்மை உற்பத்தி நிலையம், இலங்கை மற்றும்
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை) ஆகியோரைக் கொண்ட 250 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன்
எதிர்பார்த்ததை விட மேலதிக பங்கேற்பால் இதற்கு ஆதரவு கிடைத்தது.
தன்னார்வலர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப்
பயன்படுத்துதல் மற்றும் கழிவுகள் பிரிக்கப்பட்டு பொறுப்புடன் அகற்றப்படுதல், முடிவுகளை
கண்காணித்து பதிவு செய்தல் என்பவற்றை குறித்து விளக்கமளிக்கப்பட்டு சிறந்த
நடைமுறைகளின்படி
கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.
கடற்கரை சுத்திகரிப்பு முடிவுகள் 92 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், 180 கிலோ கண்ணாடி கழிவுகள், 250 கிலோ கலப்பு கழிவுகள் மற்றும் 12,000 கிலோ (12 தொன்கள்) நிலப்பரப்பில் பதிவு செய்யப்பட்டன.
ஹிக்கடுவ நகர சபை மற்றும் க்ளீன்டெக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கு உதவியது.